2--தாத்தாவும் பேரனும்
பட்டு மாமியும் முத்து மாமாவும்
மாமி ; உங்க நண்பருடைய மகனும் மருமகளும் தனிகுடித்தனம் போறாளாமே. நிசமா?
மாமா; மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒத்துபோகலையாம் அதனால தனிகுடித்தனம்.
மாமி ; பாவம் அந்த பேரன்
1 --தாத்தாகதை சொல்ல பாட்டிசோறூட்ட என்ன
தவம் செய்தானோ அந்த பேரன்
2--தாய்தந்தை திரும்புவரை தனித்திருந்து வாடி
தவிக்கவேண்டுமோ தவபுதல்வன்
3--பார்த்துபார்த்து வளர்த்தவரும் பாரமாவாரோ
4-- கணவன்தேவை அவன்தந்த குழந்தைதேவை ஆனால்
அவனைதந்த அவர்கள்வேண்டாம் அவளுக்கு
5-- குழந்தையாக அத்தையை நாடிஓடியவளுக்கு
குமரியானதும் அத்தை வேப்பம்காயாம்
6-- அத்தை என்ன சொத்தையா அட்டகாசம் செய்வாள்
உத்தமியான மருமகளுடன்
7-- பேத்தியை பாசம் கொண்டாட பர்மிசன்
தேவை அந்த பாட்டிக்கு
8-- மனைக்கு இருகதவுகளாம் தாயும் தாரமும்
இரண்டும் அவசியம் அன்றோ!!!
மாமா ; பராவாயில்லையே நல்லாவே கவிதை சொல்ற