Wednesday, 21 December 2016

     மதியில் மட்டுமன்றி  மனம் முழுவதும்  மாலதியே  நிறைந்து  என்னை குழப்பினாள் . அவளுக்கு  உதவவேண்டும் என்று  மனம் கூறியது , உதவிக்கு சென்றால் ஆபத்து என்று மதி அச்சுறுத்தியது . மதிக்கும்  மனதுக்கும் மத்தியில்  மிக பெரிய போராட்டம் .








Friday, 1 January 2016

KANEERIL KARAIGENREN

                                                      

                                                       கவிதை 

                               

                    கண்ணீரில்  கரைகின்றேன் 

                                                                      K . Indira


குமரியாக  இருந்த போது  என்னில்
  குறை ஒன்றும்  தெரியவில்லை  உனக்கு
குரல் இனிது  குருள் இனிது  என்று
    குழைந்து  குழைந்து  பேசினாய்

கன்னி  என்னை  சுற்றி வட்டமிட்டு அலைந்தாய்
     கன்னம்  சிவக்க  புகழ்ந்தாய்
கண்களில் நீர் வரும் வரை சிரிக்க விட்டு
     காதல் கதைகள்  பல சொன்னாய்

 இன்றும்  என் கண்கள் நீரை  சிந்துகின்றன
    இன்னொருத்தி  உன் வாழ்வில் வருவாளோ  என்ற அச்சத்தில்
இன்று பாவை நான் காயாய்  கசக்கின்றேன்
     இருந்தும்  இல்லாமல் இயலாமையில்   வாழ்கின்றேன்

 மனைவியாக  ஆனா பின் மங்கை நான் கசக்கின்றேன்
    முடிந்ததெல்லாம்  செய்தாலும்  முகம் சுளிகின்றாய்
முன்பு  பேசிய  சொற்கள் எல்லாம் மணாளன் நீ  மறந்தாலும்
       மனதில் நிறைந்து மறைந்து போக மறுக்கின்றன

பிள்ளை இல்லை என்று என்னை ஓதிக்கிவிட்டாய்
    பாசமாய்  பெற்றவன் இல்லை என்றால் என்ன
பள்ளியில்  முப்பது முகம் எனக்காக  ஏங்குமே
     பாடம் சொன்னதால்  பாசமாக  பேசுமே

அனாதையாக  திரிபவனை  ஆதரித்தால்  போதாதோ
     அத்தை என்பவனை  தத்து எடுத்தால் ஆகாதோ
அத்தான்  உனக்கு நான்  எனக்கு நீ  என்று
    அன்பாய் காலம்  கடத்தினால்  போகாதோ ........
                                கொஞ்சும்  யோசி  ப்ளீஸ் ........