கவிதை
கண்ணீரில் கரைகின்றேன்
K . Indira
குமரியாக இருந்த போது என்னில்
குறை ஒன்றும் தெரியவில்லை உனக்கு
குரல் இனிது குருள் இனிது என்று
குழைந்து குழைந்து பேசினாய்
கன்னி என்னை சுற்றி வட்டமிட்டு அலைந்தாய்
கன்னம் சிவக்க புகழ்ந்தாய்
கண்களில் நீர் வரும் வரை சிரிக்க விட்டு
காதல் கதைகள் பல சொன்னாய்
இன்றும் என் கண்கள் நீரை சிந்துகின்றன
இன்னொருத்தி உன் வாழ்வில் வருவாளோ என்ற அச்சத்தில்
இன்று பாவை நான் காயாய் கசக்கின்றேன்
இருந்தும் இல்லாமல் இயலாமையில் வாழ்கின்றேன்
மனைவியாக ஆனா பின் மங்கை நான் கசக்கின்றேன்
முடிந்ததெல்லாம் செய்தாலும் முகம் சுளிகின்றாய்
முன்பு பேசிய சொற்கள் எல்லாம் மணாளன் நீ மறந்தாலும்
மனதில் நிறைந்து மறைந்து போக மறுக்கின்றன
பிள்ளை இல்லை என்று என்னை ஓதிக்கிவிட்டாய்
பாசமாய் பெற்றவன் இல்லை என்றால் என்ன
பள்ளியில் முப்பது முகம் எனக்காக ஏங்குமே
பாடம் சொன்னதால் பாசமாக பேசுமே
அனாதையாக திரிபவனை ஆதரித்தால் போதாதோ
அத்தை என்பவனை தத்து எடுத்தால் ஆகாதோ
அத்தான் உனக்கு நான் எனக்கு நீ என்று
அன்பாய் காலம் கடத்தினால் போகாதோ ........
கொஞ்சும் யோசி ப்ளீஸ் ........